மவுலிவாக்கம் கட்டிட தகர்ப்பை பார்க்க மொட்டை மாடிகளில் மக்கள் கூட்டம்.. கால்நடைகள் வெளியேற்றம்

சென்னை: வெடிபொருள் வைத்து மவுலிவாக்கம், 11 மாடி கட்டிடம் நொறுக்கப்படுவதை பார்க்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர்.

பாதுகாப்பு குறைபாடுடன் கட்டப்பட்ட மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் வெடிபொருட்களை கொண்டு இன்று மாலை இடித்து நொறுக்க முடிவு செய்யப்பட்டது. இதை பார்வையிட அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, அக்கம் பக்கத்து ஏரியாக்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கூடிவிட்டனர்.

Moulivakkam

கட்டிடம் தகர்க்கப்படும் பகுதியின் அருகே பொதுமக்கள், கால் நடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, தூரத்திலுள்ள பில்டிங்குகளின் மொட்டை மாடிகளில் ஏறி நின்றபடி கட்டிடம் நொடிப்பொழுதில் இடிந்து விழுவதை வியப்போடு பார்க்க அவர்கள் கூடினர்.இதனால் அப்பகுதியிலுள்ள மொட்டை மாடிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

செய்தி சேனல் மீடியாக்கள் பலவும், இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டன. எனவே ஓ.பி வேன் எனப்படும், நேரலை ஒளிபரப்பு சாதனங்கள் அடங்கிய வேன்கள், டிஷ் ஆன்டெனாக்களுடன் அப்பகுதியில் குவிந்திருந்தன. இதனால் மவுலிவாக்கம் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

இதனிடையே, அப்பகுதியில் திரிந்த தெரு நாய்களை, ப்ளூகிராஸ் அமைப்பினர் பத்திரமாக மீட்டுச் சென்றனர். மாடு, ஆடுகள் வேறு பகுதிக்கு விரட்டி விடப்பட்டன.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/wrWhxWu3d5I/hundreds-people-witnessed-demolition-11-storey-building-moulivakkam-266230.html

Related Posts:

«