மஹிந்தவும் மைத்திரிம் இணைய வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பொதுவான கொள்கைக்கு உடன்பட்டு ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிக்கு குழுவின் முன்னாள் தலைவர் கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணையாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் நாட்டு மக்களும் பெருமளவு பாதிக்க நேரிடும என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிக்கு குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் மற்றும் மஹிந்த ஆதரவாளர்களுக்கிடையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிக்கு குழு, ஜனாதிபதி மற்றும் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படாமல் சுயாதீனமாக செயற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«