மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு இரண்டாவது திருமணம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே இரண்டாவது திருமணம் செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரியில் இந்தத் திருமணம் இடம்பெறவுள்ளதுடன் அவரது முதலாவது மனைவி ஆஷா விஜயந்தியை 2013 இல் முறைப்படி விவாகரத்து செய்ததைத் தொடர்ந்தே இரண்டாவது திருமணம் செய்வதற்கு அவர் இப்போது முடிவெடுத்துள்ளார்.

முதலாவது திருமணத்தில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் மஹிந்தானந்த அளுத்கமவுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகளும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் முன்னாள் மனைவியுமான சேனாலி ஜயரட்னவுடன் மஹிந்தானந்த சில வருடங்களுக்கு முன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அதை மறுக்கவில்லை.

அந்த சேனாலியைத்தான் மஹிந்தானந்த திருமணம் செய்யப் போகிறாரா அல்லது வேறு பெண்ணையோ என்று தெரியவில்லை. இருப்பினும், ஜனவரியில் திருமணம் முடிப்பது மாத்திரம் உண்மையென அவரது செய்திகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts:

«