மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கப்பல் மூழ்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது: துமிந்த திசாநாயக்க

மூழ்கிய கப்பலில் பயணம் செய்ய நினைப்பவர்களும் கடலில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் சென்று கொண்டிருப்பவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியே இல்லாதவர்கள் ஆட்சியை அமைக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இரத்தினபுரியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி- ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவையுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

Related Posts:

«