மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை: ஃபியூஸ் கோயல்

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துகூட தமிழக முதல்வரிடம் பேச முடியவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் ஃபியூஸ் கோயல் கூறியுள்ளார். 


இந்திய கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ஃபியூஸ் கோயல், மாநிலங்களில் மின் திட்டங்களை கூட்டுவதுக் குறித்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வளர்ச்சித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார். இது போல கடந்த 18 மாதங்களில் 28 மாநிலங்களில் மின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

ஆனால், தமிழக முதல்வருடன் மட்டும் தொடர்புக்கொள்ளவே முடியவில்லை என்றும் கடந்த 22 மாதங்களில் ஒரே ஒரு முறை தொலைப்பேசியில் தொடர்புக்கொள்ள முடிந்த போது, நேரில் சந்திக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியதாகவும், ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் கோயல் தெரிவித்துள்ளார். கோயலின் இந்த கருத்தையே மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் கூறியுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

Related Posts:

«