மாமியாருடன் சண்டை போட்ட ஐஸ்வர்யா ராய்!


aishwarya_jeyaபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா திருமணம் செய்த நாளிலிருந்து, குடும்பத்தில் பிரச்னை என இதுவரை எந்த செய்தியும் வெளியானதில்லை.

ஆனால் தற்போது மாமியார் ஜெயா பச்சனுக்கும், மருமகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் ஐஸ்வர்யா நரேந்திர மோடியை புகழ்ந்தது தான் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, சமீபத்தில் குஜராத் சென்றிருந்த ஐஸ்வர்யா ராய் அம்மாநிலத்தின் வளர்ச்சியையும், மோடியையும் புகழ்ந்து பேசினார்.

ஆனால் ஜெயாவுக்கு மோடி என்றால் அறவே பிடிக்காது, இதுதான் இருவருக்கும் பிரச்னை ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே புத்தக வெளியீட்டு விழாவுக்கு அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் வந்திருந்தனர்.

ஆனால் ஜெயா பச்சனை காணவில்லை. இதன் மூலம் இருவருக்கும் இடையே பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Posts:

«