மார்ச்சில் உள்ளூராட்சி தேர்தல்! ஜனவரியில் திருத்தங்கள் நிறைவேற்றம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்கும் மேலாக நடத்தப்படாமல்இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் அதை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கானவாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்றும், அதற்கு ஏற்பவே நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

இந்தத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக இருக்கின்ற திருத்தங்கள் ஜனவரியில்மேற்கொள்ளப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வருடத்தைக் கடந்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்னும் நடத்தப்படாமல்உள்ளது. சில சட்ட சிக்கல்களே அதற்கு காரணம்.

இது தொடர்பில் 57 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வேண்டியுள்ளன. தேர்தல்திணைக்களமும் இதைச் சுட்டிக்காட்டியது.

நாடாளுமன்றில் இந்தத் திருத்தங்களைமேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுமுடிந்துவிடும்.

மார்ச் மாதம் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்பவே இப்போதுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்

Related Posts:

«