மியான்மார் படகு விபத்தில் 100 பேர் பலி என அச்சம் : தைஃபூன் சரிக்கா புயலுக்கு 24 பேர் பலி

விபத்தில்  சிக்கிய இந்தப் படகில் இருந்து 154 பேர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். மேலும் 25 சடலங்களும் மீட்கப் பட்டுள்ளன. இப்படகில் 70 அல்லது 80 பல்கலைக் கழக மாணவர்களும் 30 பள்ளி மாணவர்களும் டாக்டர்களும் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. மியான்மாரின் மேற்கு மாநிலமான ராக்கைன் கடற்கரையில் ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற படகு விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட குறைந்தது 21 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை மியான்மாரில் தைஃபூன் சரிக்கா புயல் தற்போது வேகம் குறைந்துள்ள நிலையில் இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸில் தைஃபூன் சரிக்காவுக்கு இருவர் பலியானதுடன் 150 000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெய்த கடும் மழையினால் மியான்மாரில் 125 000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் தற்காலிகமாக வடக்கு மற்றும் தெற்கு அதிவேகப் பாதையும் தடைப்பட்டு உட் கட்டுமானம் சேதம் அடைந்தும் உள்ளது. மேலும் பயிர்ச்செய்கையும் மீன் பண்ணைகளும் கூட பாதிக்கப் பட்டுள்ளன.

 தற்போது தென் சீனக் கடலில் வலுவிழந்துள்ள தைஃபூன் சரிக்கா மணிக்கு 15 தொடக்கம் 20 Km வேகத்தில் வடக்கு வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாக வியட்நாமின் தேசிய காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 

Related Posts:

«