முதல் முறையாக வெளியானது தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோக்குள்ளான புகைப்படங்கள்.!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குள் பல்வேறு தலைவர்களும் சென்று பார்த்து வருகின்றனர்.

எனினும், அவர்கள் உள்ளே யாரைச் சந்தித்தனர் என்பது குறித்து ஒரு புகைப்படம் கூட வந்ததில்லை. இந்நிலையில், முதல் முறையாக ராகுல் காந்தி வந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குள் எடுக்கப்பட்டு வெளியான முதல் படங்கள் இவைதான் என்பதால் இந்தப் படங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதுவரை உள்ளே நடப்பது என்ன என்பது தொடர்பாக எந்தப் புகைப்படமும் வெளியானதில்லை. திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளனர்.

எனினும், எந்தப் படமும் வந்ததில்லை. இதுகுறித்தும் சர்ச்சை நிலவி வந்தது. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்து போன படத்தையும் கூட யாரும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று அப்பல்லோவுக்கு வந்தார். அவர் மருத்துவமனை தலைவர் பி.சி ரெட்டி மற்றும் வைத்தியர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது முதல்வரின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்களும், மருத்துவமனைக்குள் ராகுல் காந்தி வந்த படமும் தற்போது வெளியாகியுள்ளது.

இதுதான் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க வந்த ஒரு தலைவர் தொடர்பான முதல் படம் என்பதால் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது. அதை விட முக்கியமாக.. இது மட்டும் வெளியானது ஏன் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

Related Posts:

«