முப்பொழுதும் உன் கற்பனைகள் சினிமா விமர்சனம்Muppozuthum Un Karpanikal

வித்தியாசமான கொலைவெறி காதலை சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எல்ராட் குமார். கொஞ்சம் யோசித்து பார்த்தால் செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகம்தான் இந்த படம். கொஞ்சம் தவறியிருந்தாலும் படம் குழப்பங்களின் குவியலாய் போயிருக்கும், நல்ல வேளை இயக்குனர் கதையின் ஓட்டத்தை தனது திறமையான திரைக்கதையால் குழப்பங்களை குறைத்திருக்கிறார்.

Director cum part time producer tried to say something new diehard love story, If you think for while you can knew that this story seems to be the second part of the selvaragavan’s “7G Rainbow colony”. If he would have missed this script this film would have full of confusions. But certainly director have scored with his good screen play and reduce the confusions a bit.

படம் விளம்பரத்திற்க்காக கோடிகளை கொட்டியவர்கள் கொஞ்சம் கதையிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கலாம். புதுமையான கதை என நினைத்து புதுமையாக சொன்ன விதம் எடுபடவில்லை என்பது உண்மை. கேட்பதற்க்கு நன்றாக இருக்கும் கதை எடுக்கபட்ட விதத்தில் நன்றாக உதை வாங்கியிருக்கிறது.


அம்மாவின் தீவிர அன்பில் வளர்க்கப்பட்ட அப்பா இல்லாத கதாநாயகனான அதர்வா ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்கிறார். சென்னையிலிருந்து புராஜக்ட் விஷயமாக பெங்களூர் அலுவலகத்தில் வேலை செய்யும் அமலா பாலுடன் இணைந்து பிராஜக்ட் செய்கிறார். அம்மாவின் அன்பை போலவே கிடைக்கும் அமலா பாலின் அன்பில் மயங்கும் அதர்வா காதலிக்க தொடங்குகிறார். திடீரென்று பெரிய இடத்து வில்லன்களால் தாக்கப்படும் அதர்வா சுயநினைவை இழக்கிறார். அமலாபால் அமெரிக்க சென்றுவிட அவள் தன்னுடன் இருப்பதாக நினைத்து வாயில் நுழையாத பெயர் கொண்ட நோயில் வாடும் அதர்வா, அமலா பாலை மீண்டும் சந்தித்தாரா இல்லையா என விளக்கும் இரண்டாவது பாதிதான் மீதிக்கதை.


அதர்வா ஐடி கம்பெனியில் வேலைசெய்யும் மார்டன் பையனாக வலம்வருகிறார். நடிப்பில் அப்படியொன்றும் ஸ்கோர் செய்யவில்லை எனினும் சண்டை காட்சிகளில் பின்னுகிறார். இன்னும் கூட நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.


அமலா பால் எல்லாரையும் கட்டி பிடிக்கிறார், அதர்வாவுடன் நெருக்கமாய் நடிக்கிறார், மற்றபடி சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.


ஃபிளாஷ்பேக்கில் சொல்லும் கதை கொஞ்சம் புதுமை. அதர்வாவின் அம்மாவாக வருபவர் கனகச்சிதம்.அய்யோ பாவம்….நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் அய்யர் வேடத்தில் நாசர் ஏ ஒன். டாக்டராக வரும் ஜெயப்பிரகாஷ் இரண்டாவது பாதியில் படமுழுக்க வருகிறார். நிறைவாய் செய்திருக்கிறார். 

அமெரிக்க வில்லன்கள் இந்திய ரோடுகளில் பெரிய பெரிய வண்டிகளை ஓட்டுகிறார்கள். பட்ட பகலில் கார்களை நொறுக்குகிறார்கள். லாஜிக் உதைக்கிறதே டைரக்டர் சார்!
விழுந்து விழுந்து காதலிக்கும் அதர்வாவின் காதல் கடைசிவரை நம் மனதில் ஒட்டவில்லை. அதர்வாவை காதலிக்காத அமலா பாலும் அதர்வாவிடம் மனைவியை விட நெருக்கமாய் இருக்கிறார்.
கலர்ஃபுல்லான படத்தில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பெங்களூரின் அழகு கேமரா பார்வையிம் இன்னும் அழகாய் இருக்கிறது.


நிஜத்தில் நடக்காத கதையை திரையில் காட்டியதை கொஞ்சம் ரசிக்கலாம்.

மொத்தத்தில் முப்பொழுதும் உன் கற்பனைகள் – கற்பனைக்கு எட்டாத கனவுகள்! 

Producers spent crores of money for the promotion but he could have given importance to the story. It sounds good to hear but not suitable to watch on screen. Hero Atharvaa who works in an IT company who has no father grows with the mother’s affection. Atharva goes to Bengaluru for a project, enters the Heroine Amala Paul she works with Bengaluru branch both joined together to finish the project. Atharva cherished the mother’s love from Amala and he is started to fall in love. Suddenly villain’s enters and attacks Atharva he lost in consciousness. Thinking that Amala Paul is with him blabbering some think that have rare disease but Amala has been to America for her marriage. Will he meet Amala Paul again or not? Second half will give you the answer. Atharva is a modern guy who works for IT Company. He doesn’t score much in acting but he scores in action sequences. He should have concentrated much in acting.

Amala hugs everyone, acts close to Atharva nothing else to say. Flashback story is different one. And the mother’s character suits well for the story.

Oh God….Naser the perfectionist is not been utilized properly But he have done his small roll perfectly. Jayaprakash as Doctor who shares screen space in second half, scores well.

American Villon’s who drives big vehicles in Indian roads, and crushing cars! There is no logic. Atharva who loves Amala deeply till the end but this love does not touch our heart. Music has not scored much in this colorful movie. Bengaluru’s beauty well shown.

The story will not happen in reality but in screen we can enjoy bit.

Totally Muppozuthum Un Karppanaigal – Unimaginable dreams.

Related Posts:

  • No Related Posts

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *