முல்லைப் பெரியாறு அணை குறித்த மனுக்களைத் தமிழக அரசு திரும்பப் பெற்றது

தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணைக் குறித்த அனைத்து மனுக்களையும் இன்று  திரும்பப் பெற்றது. 


முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு வேண்டும்,  அணைக்கு தமிழக அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் சென்றுவர வசதி செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக் கட்ட முயற்சி செய்யும் கேரள அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பல மனுக்களை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் வாபஸ் பெற்றுக்கொண்டு, 2014ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யும் படியான மறு சீராய்வு மனுவாகவும், அதில் அனைத்துக் கோரிக்கைகள் அடங்கிய ஒரே மனுவாகவும் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர் இதையடுத்து தமிழக அரசு அனைத்து மனுக்களையும் வாபஸ் பெற்றுக்கொண்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி ஒரே மனுவாக மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளது.

Related Posts:

«