முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்திருந்தனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சம்பவம் குறித்தேனும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

இ;வ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியிருந்தது எனவும்> பிரபாகரனுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது எனவும் திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

Related Posts:

«