மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்:திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம்: ஜவாஹிருல்லா  மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம் செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.

 ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தமிழக சட்டமன்றத்தில் பணியாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«