மெதமுலன என்ற பெயரைக் கேட்டாலே பயமாயுள்ளது: அமைச்சர் நவீன்


மெதமுலன என்ற பெயரைக் கேட்டாலே பயம் தொற்றிக்கொள்வதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மெதமுலன என்ற பெயரானது முழு நாடும் அறிந்த பெயர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த உயர்ந்த நிலைக்கு சென்றதாகவும், பாரிய சேவைகளை நாட்டிற்கு செய்துள்ளதோடு, யுத்தத்தையும் நிறைவு செய்தவர் மஹிந்த என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் நவீன்,

இவற்றையெல்லாம் செய்த மஹிந்த தான் பதவியிலிருந்து செல்ல வேண்டிய நேரத்திற்கு சென்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில நாடுகளின் தலைவர்கள் 20-25 வருடங்களுக்கு ஆட்சி செய்வதாகவும் இறுதியில் இரத்தக்களரியினால் அவர்களது ஆட்சி நிறைவுறுவதாகவும் தெரிவித்துள்ள அவர்,

மஹிந்தவை 25 வருடங்கள் தலைவராக வைத்துக்கொள்ளும் அளவிற்கு எமது நாட்டு மக்கள் துரதிஸ்டசாலிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«