மேஷ லக்னம் அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்கள் மேஷ லக்னத்திற்கு குரு 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். சமுகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றிபெற கடின முயற்சி செய்து வருவீர்கள். கையில் பணப்புழக்கம் நன்கு இருக்கும். வராத பணங்கள் தவணை முறையில் வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். உடன்பிறப்புகளுக்கு நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் நடந்தேறும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்துசேரும். புதியமுயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாய்ப்புகள் அமையும். அடிக்கடி பிரயாணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் கிட்டும். அதனால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அதேசமயம் வீண் அலைச்சலும் மனவேதனைகளும் சமயங்களில் வந்து சேரும்.

தாயாரின் அன்பும் ஆசீர்வாதமும் கிட்டும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். அதேசமயம் சொத்து வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்த்து வாங்குதல் நலம். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். சுபகாரியங்களில் ஈடுபடவாய்ப்புகள் கிட்டும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். காதல் விஷயங்களில் மனம் மகிழ்வுடன் இருக்கும். அடிக்கடி தெய்வதரிசனம் கிட்டும். எதிர்பாராத வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமாக எதிரிகளை சந்திக்க வேண்டிவரும். கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வேலையாட்களால் நன்மையேற்படும். அடிக்கடி உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டு விலகும். வழக்குகள் தாமதமாகும்.

இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். அரசால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். பென்சன், பி.எப். கிராஜிவிட்டி மற்றும் மனைவி மூலம் பணவரவுகள் அமையும். அரசாங்க விஷயங்களில் அதிகக் கவனம் தேவை. தள்ளிப்போன விசா வந்து சேரும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். குடும்பத்தில் புது வரவுகளும் வந்து சேரும். நண்பர்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும்.

உத்யோகஸ்தர்களுக்கு (JOB)

வேலை என்றால் அரசு மற்றும் தனியார் துறை இருசாராரையும் குறிக்கும். வேலையில் இருப்பவர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி வரும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.

வேறு வேலை கிடைக்க வாய்ப்புகள் சற்று குறைவாக இருப்பதால் பார்க்கும். வேலை விடுதல் கூடாது. ஒரு சிலருக்கு உத்யோகத்தில் உயர்வும் எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சிறுதொழில் சுயதொழில் புரிபவர்கள் ஆரம்பத்தில் லாபம் சற்று குறைவாக இருந்தாலும் ஜனவரிக்குப்பின் ஓரளவு லாபம் அடைவர். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் தேடி வரும். பெரிய அளவில் முதலீடு செய்ய சந்தர்ப்பங்கள் வாய்க்கும். வெளிநாட்டுத் தொடர்பு லாபகரமாக அமையும். பங்குச்சந்தை சற்று லாபகரமாக இருக்கும். உற்பத்தித்துறை, சேவைத்துறை, போக்குவரத்து ஏற்றம் அடையும். ரோட்டோர வியாபாரிகள், சிறுவணிகர்கள் லாபம் அடைவர். நிதி, நீதி, வங்கித்துறை ஏற்றம் பெறும். கமிஷன், ஏஜன்சி, புரோக்கர், சேவைத்துறை ஒரளவு லாபம் அடையும். ரியல் எஸ்டேட் லாபகரமாக இருக்கும். ஆடை, ஆபரணத் தொழில், அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தி லாபமுடையதாக இருக்கும். சிமென்ட், இரும்பு, எஃகுத் தொழில் சற்று கவனம் தேவை..

விவசாயிகள்:

விவசாயம் சற்று சுமாராக இருக்கும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காமல் சோர்வு உண்டாகும். கடன் வாங்க வாய்ப்புகள் கூடும். புதிய விவசாயக் கருவிகள் வாங்க வாய்ப்புகள் கூடும். ஒரு சிலருக்கு விளைநிலங்களை விற்பதற்கு வாய்ப்புகள் அமையும்.

அரசியல்வாதிகள்:

அரசியல் வாழ்வு ஓரளவு சுமாராகவே இருக்கும். ஏற்ற இறக்கங்களுடன் சற்று சுமார். பொது வாழ்வில் இருப்போர் சமூக சேவர்கள் நல்ல பெயர் புகழுடன் விளங்குவர். ஒரு சிலருக்கு அரசாங்கத்தால் அச்சுறுத்தல் இருந்து கொண்டேயிருக்கும்.

கலைஞர்கள்:

கலைத்துறையில் இருப்பவர்கள் பெயர், புகழ் பெற்றாலும் பெரிய அளவில் பொருளாதாரத்தில் ஏற்றம் இராது. புதிய ஒப்பந்தங்கள் எதிர்பார்த்த அளவு அமைந்தாலும் பொருளாதார நிலை சற்று சுமாராகவே இருக்கும்.

மாணவர்கள்:

நல்ல கல்வி ஞானம் அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகள் அமைய வாய்ப்பு உண்டு. வங்கியில் எதிர்பார்த்த பணம் ஒரு சிலருக்கு கடன் கிடைக்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலர் உயர் கல்விபயில வெளிநாடு செல்ல வாய்ப்பிருக்கும்.

பெண்களுக்கு:

தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும் காலமிது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உயரதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வர். சக ஊழியர்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். விரும்பிய வேலை அமைவதில் நடையேற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அடிக்கடி உடல்சோர்வும் மனத்தளர்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அமைந்தாலும் இனம் தெரியாத குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும்.

உடல் ஆரோக்யம்:

உடலில் கால், கண், சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அறுவை சிகிச்சைக்கான காலமிது. உடலில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:

சனிக்கிழமை தோறும் “சனிப்பகவானையும்”, “ஆஞ்சநேயரையும்” வணங்கி வருதல் நலம். வாய்ப்பிருந்தால் “திருக்கொள்ளிக்காடு” சென்று ___ தீபம் ஏற்றி வர அதிக நன்மையேற்படும். ஜனவரிக்குப் பின் “நாகூர்” சென்று வர நன்மைகள் அதிகரிக்கும்.

Related Posts:

  • No Related Posts

«