மே மாதத்தில் அதிகளவான வெப்பம்! நாசா அதிர்ச்சி தகவல்


கடந்த மே மாதம் உலகம் முழுவதும் அதிகளவான வெப்பம் நிலவியதாக, அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செய்தி வெளியிட்டுள்ளது.

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால், பெரிய அளவில் வானிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் கடந்த, மே மாதம் இதன் தாக்கம் அதிகளவில் இருந்ததாக நாசா குறிப்பிட்டுள்ளது.

நாசாவின் ஆராய்ச்சி அடிப்படையில், சர்வதேச வானிலை மைய நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, கடந்த மே மாதத்தில் கடுமையான வெப்பம் காணப்பட்டது.

வழமையாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக காணப்படும். மே மாதத்தில், பல பகுதிகளில் வசந்தகாலமாகவும் இருக்கும்.

எனினும், கடந்த மே மாதம் கடுமையான வெப்பம் நிலவியதுடன், வெப்ப மண்டல பகுதிகள் மட்டுமின்றி, ஆர்டிக் துருவ பிரதேசமும், இதன் பாதிப்புக்கு தப்பவில்லை.

இக்கால பகுதியில், அதிகளவான பனிகட்டிகள் உருகியுள்ளன. கடந்த, 78 ஆண்டுகளில் இல்லாத அளவு பனி உருகியுள்ளது.

இவ்வெப்பத்தால், பனி உருகியது மட்டுமின்றி, எல் – நினோ தாக்கத்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண்டத்தில், சமீபத்தில், வழக்கத்துக்கு மாறாக அதிகளவான மழை பெய்துள்ளது.

கார்பன் – டை ஆக்சைடு படலம் அதிகரித்ததன் காரணமாகவே எல் – நினோ தாக்கம் அதிகமாக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கார்பன் டை ஆக்சைடு அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாயு கசிவு

பூமியின் மேற்பரப்பில், மீத்தேன் கசிவு இருப்பதை, விண்கலன்கள் அளவிட்டுள்ளன. பூமியில் இருந்து வெளியாகும், வாயுக்களை அளவிடும், விண்கலன்கள் இதை உறுதி செய்துள்ளன.

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில், அலிசோ கன்யான் பகுதியில், இவ்வாயு கசிவு இடம்பெற்ற அளவிடப்பட்டுள்ளது.

Related Posts:

«