மைத்திரி அமெரிக்கா செல்கிறார்; ஒபாமாவையும் சந்திப்பார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 


நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டின் 70வது அமர்வு இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related Posts:

«