மொஹாலி போட்டியில் டோணி மேலும் ஒரு ரெக்கார்டு!

மொஹாலி: மொஹாலி ஒரு நாள் போட்டியில் கேப்டன் டோணி இன்று மேலும் ஒரு சாதனையைப் படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள் வரிசையில் சச்சினை அவர் இன்று முந்தினார்.

மொஹாலி ஒரு நாள் போட்டியில் இன்று கேப்டன் டோணி அசத்தலாக விளையாடினார். இன்றைய போட்டியில் அவர் ஒரு நாள் போட்டிகளில் 9000 ரன்களைக் கடந்து புதிய இலக்கை எட்டினார்.

Dhoni reaches one more milestone in Mohali ODI

அதேபோல இன்னொரு இலக்கையும் இன்று எட்டினார் டோணி. அதாவது அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் அவர் சச்சினை முந்தினார்.

இன்றைய போட்டியில் விளாசிய சிக்ஸர்களையும் சேர்த்து அவர் மொத்தம் 281 போட்டிகளில் 196 சிக்ஸர்களை விளாசியுள்ளார். சச்சின் 463 போட்டிகளில் விளையாடி 195 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

மொத்தத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் டோணி. முதல் இடத்தில் அப்ரிதி (351), 2வது இடத்தில் ஜெயசூர்யா (270), கிறிஸ் கெய்ல் 3வது இடத்திலும் (238), 4வது இடத்தில் மெக்கல்லமும் (200) உள்ளனர்.

கங்குலி சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஏப் டிவில்லியர்ஸ் இருக்கிறார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/u7_scseF_fM/dhoni-reaches-one-more-milestone-mohali-odi-265543.html

Related Posts:

«