யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்து தவறானது: லஹிரு வீரசேகர 

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பதாகவும், இது ஓர் சாதாரண விடயம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதனை ஏற்றுக்கொள்ள முடியாது என லஹிரு வீரசேகர கூட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை சாதாரண விடயமாக கருதுவதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர், வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் இந்த சம்பவம் குறித்து குரல் கொடுக்காமல் விடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை திங்கட்கிழமை நாட்டின் அனைத்து பல்கலைக்கழங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Posts:

«