ரசிகர்களை அதிர வைத்த பிரபல நடிகையின் முத்தக்காட்சி

இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன.

தனுஷ் நடித்த 3 படத்தின் கொலவெறி பாடலுக்கு இசையமைத்து புகழ்பெற்றார் இசையமைப்பாளர் அனிருத்.

இவர் இளம் இசையமைப்பாளர்களில் வேகமாக வளர்ந்து வருகிறார்.

அந்நியன் படத்தின் மூலம் பாடகியாகவும், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நாயகியாகவும் அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா.

இது தவிர வேட்டையாடு விளையாடு, ஆயிரத்தில் ஒருவன், கோவா, மெரினா, மன்மதன் அம்பு ஆகிய படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.

இளம் இசையமைப்பாளர்களுடன் ஆண்ட்ரியாவிற்கு நல்ல நட்பு இருந்து வந்தது. கமல் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனிருத்தும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருக்கும் முத்தக்காட்சி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன.

அனிருத்திற்கு 21 வயதாகிறது, ஆண்ட்ரியாவிற்கு 30 வயதாகிறது. இவர்கள் காதலர்களா? என்ற சந்தேகமும் கொலிவுட்டில் எழுந்துள்ளது.

Related Posts:

«