ரயில்களில் முன்பதிவு செய்து டிக்கெட் உறுதியாகவில்லை என்றால் விமானத்தில் பயணிக்கலாம்!

ரயில்களில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு, ஆகியப் பெட்டிகளில் முன்பதிவு செய்து டிக்கெட் உறுதியாகவில்லை என்றால் விமானத்தில் பயணிக்கலாம் என்பது கடந்த சில நாட்களாக அமலில் உள்ளது. 


ரயில்களில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கு முன்பதிவு செய்துவிட்டு, கடைசிவரை டிக்கெட் உறுதியாகவில்லை என்றால், பயணிகள் ஏமாற்றத்தோடு வீடு திரும்புவார்கள், அல்லது வேறு வகுப்புக்களில் பயணம் செய்வார்கள்.ஆனால், இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி உள்ளூர் விமானங்களில் பயணிக்கும் முறையை கடந்த சில நாட்களாகவே அமல் படுத்தி வருகிறது ரயில்வே துறை. இப்போது சில விமான நிறுவனங்கள் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்தி வரும் நிலையில் மற்ற தனியார் விமான நிறுவனங்களும் இந்த சேவையைப் படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பயணிகளின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் விமான நிறுவனத்துக்கு செலுத்திவிடும் என்றும் தெரிய வருகிறது. ரயில்களின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள் கிட்டத்தட்ட விமான டிக்கெட்டுக்களுக்கு இணையாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

Related Posts:

«