ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை எண் அவசியம்: ரயில்வே துறை

ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து வைத்து, பல நூறு ரூபாய் அதிகப்படியாக விலை வைத்து இடைத் தரகர்கள் மூலம் ரயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும்,இப்படியான பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கவும், ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் என்கிற நடவடிக்கையைப் பின்பற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.  

இணையத் தளங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் இதே நடவடிக்கைதான் பின்பற்றப்படும். இதனால், ரயில் டிக்கெட் மூலமான பயண காப்பீட்டுத் திட்டமும் எளிதில் பின்பற்ற இந்த நடைமுறை மிக வசதியாக இருக்கும் என்று ரயில்வே துறை எண்ணுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Posts:

«