ரவி ஐஏஎஸ் மர்ம மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி: சித்தாராமையா

கர்நாடகாவில் ரவி ஐஏஎஸ் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார் அம்மாநில முதல்வர் சித்தாராமையா.


கடந்த 16ம் திகதி ரவி என்கிற ஐஏஎஸ் அதிகாரி மங்களூருவில் உள்ள அவரது வேறொரு இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதுத் தற்கொலை என்று முதல் தகவலறிக்கைத் தாக்கல் செய்த நிலையில், இது கொலை என்று மக்கள் மற்ற அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வாதிட்டு வந்தன. இதற்காக பல்வேறுக்கட்டப் போராட்டங்களையும் நடத்தி இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

இந்நிலையில் இன்று அவசரமாகக் கூடிய கர்நாடக சட்டப்பேரவையில் ரவி ஐஏஎஸ் மரணம் குறித்து முதல்வர் விளக்கமளித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. முதலில் கர்நாடக சிஐடி விசாரணை செய்யட்டும்,திருப்தி இல்லையெனில் பின்னர் சிபிஐக்கு வழக்கை மாற்றலாம் என்று மேலும் சித்தாரமையா கூறினார். அதோடு கர்நாடக காவல்துறை அதிகாரிகளும் நேர்மையானவர்களே என்றும், யாரையும் தாம் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.

இருப்பினும் அமளி அடங்காமல் இருக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சித்தாரமையா ஒப்புக்கொண்டுள்ளார்.ரவி ஐஏஎஸ் அதிகாரி மணல் கடத்தல் கும்பலை கண்காணித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் காரணமாக இருந்த நேர்மையான அதிகாரி என்பதுக் குறிப்பிடத் தக்கது.

Related Posts:

«