லசந்தவை கொலை செய்தது உண்மையில் யார்? இராணுவ வீரர் கொலையா? தற்கொலையா?? திடுக்கிடும் தகவல்

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் உடல் நீண்ட காலத்தின் பின்னர் தோண்டப்பட்டது அதன் பின்னரே குற்றவாளிகளை தேடும் பணி வேகமாகவே முடுக்கிவிடப்பட்டது.

தற்போது அந்தக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே என கடிதம் மூலம் தெரிவித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

“லசந்த விக்ரமதுங்கவின் கொலையில் பல இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளனர் அவர்களை அடையாளம் கண்டு விட்டோம் அவர்களுக்கு ஆணையிட்டவரை கூடிய விரைவில் கைது செய்வோம்” என அண்மையில் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

அதற்கு பின்னர் பொலிசார் வேறு எந்த வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை தற்போது இராணுவவீரர் ஒருவர் நானே கொன்றேன் என தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் கொகுவல பிரதேசத்தில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்தவர்களே லசந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்றே பொலிசார் தெரிவித்திருந்தனர் ஆனால் தற்போது இறந்தவர் கிரிதலே இராணுவ முகாமை சேர்ந்தவர்.

அப்படி அவர் தற்கொலை செய்து கொண்டு மீண்டும் தோண்டப்பட்ட வழக்கை முடிக்க முற்பட்டிருந்தால் அவருக்கு ஆணையிட்டவர் யார் என்ற சந்தேகம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

இதேவேளை அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அதற்கு காரணம் எதுவாக இருக்கும்? தற்கொலை செய்து கொண்டவர் வேறு எதனையும் தெரிவிக்காமல் கொன்றது நான் நண்பரை விடுவியுங்கள் என தெரிவித்து அந்த கடிதத்தை இடுப்பில் செருகி வைத்து கொண்டுள்ளார்.

குறிப்பாக இராணுவ புலனாய்வுக்கு இந்த கடிதத்தை கொடுத்து விடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணத்தினால் அவர் லசந்தவை கொலை செய்திருந்தால் வெளிப்படையாகவே அதனை தெரிவித்து விட்டு செத்திருக்கலாம் என்பதே உண்மை.

மாறாக நண்பரை காப்பாற்ற அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வேறு சிலர் அதாவது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களை காப்பாற்றவே இது நடைபெற்றிருக்கலாம்.

இங்கு அவர் இராணுவ வீரர் மலிந்த உடலகவை காட்டிக்கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவரது பெயரை உள்வாங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை அவர் உண்மைகளை வெளிப்படுத்த முயன்று இருக்கலாம் அதனால் அவர் கொலை செய்யப்பட்டு வேறு கோணத்தில் அதனை திசை திருப்ப அவரது நண்பனின் பெயரை இழுத்து விட்டிருக்கலாம் எனவும் ஒரு சாரர் கூறிவருகின்றனர்.

மேலும் ஏற்கனவே லசந்த கொலைத் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொடர்பு உள்ளதாகவும் கருத்துகள் வெளிவந்தன.

எவ்வாறாயினும் லசந்தவின் கொலையில் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டால் பொன்சேகாவும் கோத்தபாயவும் மஹிந்தவும் கூட பதில் சொல்ல நேரிடும் என்பதே உண்மை. அப்போது முக்கிய குற்றவாளி இனங்காணப்பட்டு விடுவார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மற்றொரு கோணத்தில் தற்போது நாட்டில் ஜனாதிபதி இராணுவத்தினருக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். அதனால் குறித்த இராணுவ அதிகாரி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆயுள் அல்லது மரண தண்டனை மட்டுமே கிடைக்கும் அதுவும் லசந்தவின் கொலைக்கான காரணத்தின் அடிப்படையிலேயே.

தற்போதுள்ள சூழலில் இழுபறி நிலையையாவது ஏற்படுத்த முடியுமானதாக இருக்கும் என்பதே உண்மை அவற்றினை விடுத்து அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மற்றொரு பக்கம் உண்மைக் குற்றவாளியை கண்டு பிடிக்க சான்றாக அமைய குறிப்பாக கோத்தபாயவின் அரசியல் பிரவேசத்தில் பாதிப்படைந்த நபர்கள் மூலம் இந்த தற்கொலை நாடகம் அரங்கேற்றப்படிருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருவதிலும் நம்பகத்தன்மை காணப்படுகின்றது.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தற்போது மஹிந்த அணியினருக்கு பாரிய தலையிடியாக இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றினை தொகுத்து நோக்கும் போது தற்போது இராணுவ அதிகாரி தற்கொலை செய்து கொள்ள வில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் இதற்கு பின்னணியில் இருக்கும் மர்ம நபர் யார்?

கோத்தபாய இதன் பின்னணியில் இருக்கின்றாரா? அல்லது சரத் பொன்சேகாவா? யார் அந்த மலிந்த உடலக என்பதும் கூடிய விரைவில் அம்பலப்படுத்தப்படும் எனவும் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts:

«