லாரன்சை வியக்க வைத்த இசையமைப்பாளர்

மகனை அஜீத் ஆக்கணும் என்பது அம்மாவோட ஆசை.


அனிருத் மாதிரி ஆகணும் என்பது மகனோட ஆசை. ரெண்டுல ஒண்ணு நிச்சயம் என்பதுதான் அந்த இயற்கையோட ஆசை! எப்படியோ அது நடந்துச்சுருச்சுல்ல? பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். அது அம்மாவின் ஆசை. ஆனால் அவருக்குள் விழித்துக் கொண்டிருந்த மியூசிக் டைரக்டர், ‘நல்ல மெலடி… அதை ரசிக்கிற நல்ல ஹீரோ, அதற்கு உயிர் கொடுக்கிற நல்ல கம்பெனி’ இம்மூன்றுக்கும் ஆசைப்பட்டு காத்திருக்க, பொசுக்கென விடிந்தது பொழுது! ராகவா லாரன்ஸ் நடிக்க சூப்பர் குட் நிறுவனம் தயாரிக்கும் ‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ படத்திற்கு அம்ரீஷ்தான் மியூசிக்! படத்தின் டைரக்டர் சாய் ரமணி சொன்ன சுச்சுவேஷனுக்கு ட்யூன் போட்டுக் கொண்டு போனவருக்கு இன்ப அதிர்ச்சி. வாங்க கார்ல போட்டு கேட்கலாம் என்று காருக்குள் ஏறிக் கொண்டாராம் லாரன்ஸ். பாடல் ஓட, காருக்குள்ளேயே லேசாக ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாராம் ஹீரோ. அப்புறமென்ன…? லாரன்ஸ் தொடர்ந்து கோடம்பாக்கத்தின் ஸ்பெஷல் ஹீரோக்கள் கண்ணில் விழ ஆரம்பித்திருக்கிறார் அம்ரீஷ். சாரு ஏ.ஆர்.ரஹ்மான்ட்ட மூணு வருஷம் வேலை பார்த்த அனுபவத்தையும் கூடவே வச்சுருக்காருல்ல?

Related Posts:

«