வடகிழக்கு பருவமழை துவங்கியது: இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்றே நேற்று துவங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறுகையில்,

Northeast Monsoon arrives in Tamil Nadu

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம். இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்த அன்றே வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.

கிழக்கு திசையில் கடலில் இருந்து ஈரப்பதமான காற்று தென்னிந்தியாவின் நிலப்பகுதி நோக்கி வீசியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு அல்லது அதைவிட 10 சதவீதம் குறைவாகவே பெய்யும்.

வடகிழக்க பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு 67 செ.மீ. மழை பெய்தது. அதாவது வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகம் பெய்தது.

இந்த ஆண்டு 39 முதல் 44 செ.மீ. வரை தான் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/HFv96gGSkV8/northeast-monsoon-arrives-tamil-nadu-266016.html

Related Posts:

«