வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 


வவுனியா பிரஜைகள் குழுவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் பலவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

யாழ். வணிகர் கழகம், இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில அமைப்புகள் இரு மணி நேரம் கடை, பாடசாலைகள் அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. எனினும் ஏனைய அமைப்புக்கள் முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Related Posts:

«