வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் தெரிவு!

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, வடக்கு மாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி வெற்றிடமாகியது.

வடக்கு மாகாண சபையில் இன்று  வியாழக்கிழமை  புதிய பிரதி அவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில், கே.வி.கமலேஸ்வரன் 18 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து, புதிய பிரதி அவைத் தலைவராக கே.வி.கமலேஸ்வரன் தெரிவாகியுள்ளார்.

 

Related Posts:

«