வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டால் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்:பிரவீன் குமார்

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தால் அதைப் பொது மக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தேர்தல் செலவு வரம்பை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இது குறித்துப் பரிசீலிக்கப் படும் என்று பிரவீன் குமார் தெரிவித்து இருக்கிறார். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமுல் படுத்தப் படும் என்றும் கூறியுள்ள பிரவீன் குமார், பொது மக்களும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அப்போது, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதைக் கண்டால் புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என்றும் கூறியுள்ளார். தமிழகத்துக்கு முன் கூட்டியே பாதுகாப்புப் படையை அனுப்பலாமா என்றும் அரசியல் கட்சிகளுடன் பிரவீன் குமார் ஆலோசித்ததாகத் தெரிய வருகிறது.

Related Posts:

«