விகாரைக்கு எதிராக மைத்திரிக்கு கடிதம்


கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகை ஆலயத்துக்கு அருகில் ஆலயக் காணியில் அமைக்கப்படுவதாக கூறப்படும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி, வடமாகாண சபையினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

ஆலயத்துக்கு சொந்தமான 4.5 ஏக்கர் காணியில் இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விகாரைக்கு எதிராக வடமாகாண சபையின் கடந்த அமர்வின் போது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டமை தொடர்பிலும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts:

«