விஜய், சூர்யாவுக்காக ‘சிவாஜி 3டி’ ரிலீஸை தள்ளிப் போடுகிறார் ரஜினி?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சிவாஜி படத்தின் 3டி பதிப்பு ரெடியாகி விட்டாலும் கூட அதன் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாமதத்திற்கு ரஜினிதான் காரணம் என்றும் கூறுகிறார்கள். அதாவது மிக விரைவில் விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. அவர்களது படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் தனது 3டி சிவாஜியை சற்று தாமதித்து வெளியிடலாம் என்று ரஜினி முடிவு செய்துள்ளாராம்.

இதுதொடர்பாக ஏவிஎம் நிறுவனத்திடம் ரஜினியே பேசி, முதலில் சூர்யா, விஜய் படங்கள் வெளியாகட்டும். நாம் சற்று தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். அதற்கு ஏவிஎம் நிறுவனமும் சரி என்று கூறி விட்டதாக சொல்கிறார்கள்.

இளம் நடிகர்கள் மீது ரஜினிக்கு உள்ள அக்கறையை, அவரது பெருந்தன்மையை இது காட்டுவதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

விஜய், சூர்யா படங்கள் வெளியாகும் நேரத்தில் சிவாஜி 3டி வெளியானால், நிச்சயம், விஜய், சூர்யா படங்களின் வசூலை அது வெகுவாக பாதிக்கும் என்பதால்தான் ரஜினியே பெருந்தன்மையாக தனது படத்தை தள்ளிப் போட யோசனை தெரிவித்துள்ளாராம்.

Related Posts:

  • No Related Posts

«