விரைவில் ஏற்படவுள்ள அரசியல் புரட்சி! பரபரப்பாகும் கொழும்பு

இலங்கையின் அரசியல் தளத்தில் தற்போது நெருக்கடியாக சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் சில வாரங்களில் இலங்கை அரசியலில் தீர்மானமிக்க மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேடமான அரசியல் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக குறித்து ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஏதாவது ஒரு வகையில் எதிர்வரும் காலத்தினுள் நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டால் அதன் அதிக பொறுப்பினை நாட்டின் இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

முக்கியமாக கடந்த ஜனவரி எட்டு அரசியல் புரட்சியின் பின்னால் செயற்பட்டவர்கள் இளைஞர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். இதனால் இளைஞர்களின் வலிமை மற்றும் புத்திசாலித்தனம் குறித்து பலர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் நாட்டின் அரசியல் மாற்றத்தை புத்திசாலித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இணையம் ஊடாக விசேட அரசியல் மாற்றத்தை மேற்கொள்ள இந்த நாட்டு இளைஞர்கள் கவனம் செலுத்தி உள்ளதாக குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts:

«