வெங்கட்பிரபுவின் சாதனை : பழைய நடிகர் மறுபிரவேசம்

கார்த்திக், மோகன் காலத்தில் அவர்களுக்கு இணையாக ஹிட்டுகளை கொடுத்தவர் ராம்கி.

நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் என்றால் சட்டென்று விளங்கும்.

விஜயகாந்துடன் சில படங்களிலும் ஸோலோவாக சில படங்களிலும் நடித்து தமிழ்சினிமாவில் முக்கிய இடத்திலிருந்த இந்த ராம்கி, திடீரென மார்க்கெட் இருக்கும்போதே தனது சினிமா ஆர்வத்தை குறைத்துக் கொண்டார்.

அவரை மீண்டும் நடிக்க சொல்லி முன்னணி இயக்குனர்கள் பலரும் அவரை நாடியபோதும் நமக்கு வேணாம்ப்பா சினிமா என்று விலகி ஓடினார் ராம்கி. அவ்வளவு அழுத்தமாக அவரை காயப்படுத்தியது எந்த சினிமாவோ, அல்லது எந்த தயாரிப்பாளரோ தெரியாது. இவரது பல வருட துறவறத்தை திடீரென்று மாற்றி காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.

இவர் இயக்கி வரும் பிரியாணி படத்தில் இந்த ராம்கி ரீ என்ட்ரி ஆகிறாராம். பொத்தி பொத்தி வைத்திருக்கிறார்கள் இந்த விஷயத்தை. ஆனால் பூ வாசத்தை சிறை பிடிக்க முடியுமா?

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *