வெலிக்கடையில் நள்ளிரவுக்குப் பின்னரும் தொடரும் மோதல்! பணயக்கைதிகளை மீட்கும் போராட்டம் தொடர்கிறது!

பொரளை, மருதானை, பேலியகொட,கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறுகின்றன.

சிறைக் கைதிகள் பலர் தப்பியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோதல் சம்பவத்தில் இதுவரை 13 போ் பலியாகியுள்ளதாகவும் 40 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெலிக்கடை சம்பவத்தில் காயமுற்றவர்கள் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரின் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

இது குறித்து கொழும்பு தேசிய வைத்தியாலை பணிப்பாளர் தெரிவிக்கையில்,

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பாதுகாப்பு படையினருக்கும், கைதிகளுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து இதுவரை 11 பேர் வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு முன்னர் மரணித்திருந்தனர். இவர்களுள் பெரும்பாலானோர் படைத் தரப்பினரைச சோ்ந்தவர்கள். காயமடைந்துள்ள 40க்க மேற்பட்டோர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் வரையில் சாதாரண சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

இதேவேளை சிறைச்சாலையில்  கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையிலான மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், நள்ளிரவுக்குப் பின்னரும் மோதல்கள் தொடர்ந்ததுடன் கைதிகளினால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட படையினரையும் சிறைக்காவலர்களையும் மீட்பதற்கான போராட்டம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. அத்துடன் இழப்புகளும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்பட்டது.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *