வேதாளம்- குழப்பத்திற்கு காரணமான ஸ்ருதிஹாசன்

விஜய்யின் புலி படத்தில் வேதாளம் என்றொரு இனம் வருகிறது.


சகல மந்திர சக்திகளும் கொண்ட அவர்கள் மனிதர்களை துன்புறுத்துகிறார்கள். விஜய் அந்த வேதாளங்களை பழிவாங்குவதுதான் கதை. படம் முழுக்க “வேதாளம் வேதாளம்” என்று பேசிக் கொண்டேயிருக்கிறார் விஜய். இதையெல்லாம் தெரிந்தேதான் தன் படத்திற்கு வேதாளம் என்று அஜீத் பெயர் வைத்திருக்கிறாரோ என்ற முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் அந்த கொடூரமான கேள்வி. புலி படத்திலும் ஸ்ருதிஹாசன்தான் ஹீரோயின். வேதாளம் படத்திலும் அவர்தான். ஷுட்டிங் ஸ்பாட்டில் இந்த விஷயத்தை அஜீத்திடம் சொல்லி வேதாளம் தலைப்பை தடுத்திருக்கலாமே? அல்லது அவரே வேதாளம் தலைப்பை கசிய விட்டிருக்கிறாரோ? எது எப்படியோ, பெரும் குழப்பத்திற்கும், அஜீத் விஜய் ரசிகர்களின் குடுமிப்பிடிக்கும் காரணமாக ஆகிவிட்டார் ஸ்ருதி.

Related Posts:

«