ஸ்கொட்லாந்தில் மிருகத்தை போல அடிமையான இலங்கை பிரஜை

இலங்கையின் பிரஜை ஒருவர் ஸ்கொட்லாந்தில் மிருகத்தை போல அடிமையாக நடத்தப்பட்டதாக செய்தித்தளம் ஒன்றின் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஷா என்ற புனைப்பெயரை கொண்டுள்ள இலங்கை பிரஜை தாம் ஸ்கொட்லாந்தின் வேலைக்கொள்வோர் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் டன்டீ என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஓய்வில்லாமல் நாள் ஒன்றுக்கு 15 மணித்தியாலங்கள் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக மாதம் ஒன்றுக்கு 50 பவுண்ட்ஸ்களே கொடுப்பனவாக வழங்கப்பட்டன.

மேலும் 2011ஆம் ஆண்டு வீட்டுவேலைக்கான வீசாவில் தான் ஸ்கொட்லாந்துக்கு வந்ததாகவும் குறித்த இலங்கை பிரஜை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய இராட்சியத்தில் சுமார் 13ஆயிரம் பேர் அடிமைத்தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் உள்துறை செயலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«