ஹன்சிகா வாய்ப்பை பறித்தார் தமன்னா

ஹன்சிகா பட வாய்ப்பை பறித்தார் தமன்னா. தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஆர்யா நடித்த படம் ‘வேட்டை’.

சமீரா ரெட்டி அமலா பால் ஹீரோயின்களாக நடித்தனர். இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. நாக சைதன்யா சுனில் ஹீரோக்கள். இரட்டை ஹீரோயின்களாக ஆண்ட்ரியா
ஹன்சிகா நடிப்பதாக இருந்தது. இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆண்ட்ரியா படத்தில் நடிக்கிறார்.

ஆனால் ஹன்சிகாவுக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பல படங்களுக்கு தூது விட்டு நடிகைகள் சான்ஸ் பிடிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. இப்பட வாய்ப்பையும் இப்படித்தான் தமன்னா பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பட வட்டாரம் ஹன்சிகாவின் கால்ஷீட் ஒத்துவராததால் அவர் நீக்கப்பட்டதாக கூறுகிறது. இது பற்றி தமன்னாவின் தந்தை பாட்டியாவிடம் கேட்டபோது ”சமீபத்தில்தான் இப்படத்தில் தமன்னா நடிக்க முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அக்டோபர் மாதம் முதல் இப்பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். மற்றபடி வதந்திகளை பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

Related Posts:

«