ஹாரிஸ் குறித்து அலட்டிக் கொண்ட விக்ரம் 

(சுமார் ஐந்து கோடி ரேட்டாம் அது) இருமுகன் படத்தின் சக்சஸ் மீட் அது. விழா முடிந்து கிளம்புகிற நேரம் வெளியே வந்த விக்ரமை சுற்றி பெரும் ரசிகர் கூட்டம். அந்த நேரம் பார்த்து தன் லம்போகினி காரை ஸ்டார்ட் செய்தார் ஹாரிஸ். அந்த காரின் அழகும், ஸ்டார்ட் ஆகும் போது அது கொடுக்கும் சவுண்டும் வந்திருந்த ரசிகர் கூட்டத்தை அப்படியே ஹாரிஸ் பக்கம் ஓட வைத்தது. எல்லாரும் வைத்த கண் வாங்காமல் அந்த காரையே பார்த்துக் கொண்டிருக்க, தன்னை சுற்றி ஒருவரும் இல்லை என்பதை புரிந்து கொண்ட விக்ரமுக்கு பெருத்த ஷாக். நானும் அதே மாதிரி ஒரு காரை வாங்குறேன் என்று முணுமுணுத்தபடியே அந்த இடத்தை விட்டு அகன்றார். இத்தனைக்கும் அவர் வந்ததும் விலை உயர்ந்த ஆடிக் கார்தான். போட்டி எப்படியெல்லாம் வருதுப்பா… 

Related Posts:

«