இன்றைய பலன்கள் 11-08-2013 by கலாபம்11-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும். மாற்றாரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற, இஷ்ட செய்வ அருள் பலம் துணை நிற்கும். ஆதாய பணவரவு, எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில், சாதகமான தீர்வு பெற அனுகூலம் வளரும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, நிதான செயல் மட்டுமே, உரிய நன்மை பெற உதவும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவர்களிடம், சச்சரவு பேகூடாது. பணவரவு கிடைப்பதில், தாமதம் இருக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். புத்திரரின் நற்செயல், மனதை மகிழ்விக்கும். – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்களை நிர்ப்பந்தம் செய்து, சிலர் சாதகமாக பயன்படுத்த எண்ணுவர். எந்த சூழ்நிலையிலும், அவர்களுக்கு துணை போக வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக புதிய நடைமுறை உதவும். பணவரவு குறைவதால், சேமிப்பை பயன்படுத்துவீர்கள். அதிக விலையுள்ள பொருள் இரவு கொடுக்க, வாங்க கூடாது. – கலாபம்

கடகம்:
இன்று, மனதில் புதிய சிந்தனை உருவாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, கூடுதல் கவனம் கொள்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழித்து தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்ப்பாளரின் தொந்தரவு விலகி, பொறுப்பான பதவி பெற அனுகூலம் வளரும். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்கள் செயல்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியமாகும். எதிர்வரும் சூழ்நிலையை சரிசெய்ய, அனுபவசாலியின் ஆலோசனை உதவும். அதிக உழைப்பினால் தொழில், வியாபார நடைமுறையில் இருந்த தாமதம் விலகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில், மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

கன்னி:
இன்று, உங்கள் எண்ணத்திலும், செயலிலும் உற்சாகம் அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களின் நலன் கருதி செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி, அதிர்ஷ்டகரமாக முன்னேற்றம் பெறும். உபரி பணவரவை, தகுந்த சேமிப்பாக மாற்றுவீர்கள். வெகுநாள் காணாமல் தேடிய பொருள், கைவந்து சேரும். – கலாபம்

துலாம்:
இன்று, உங்கள் மனதில் குழப்பமான சிந்தனை இருக்கும். அறிமுகம் இல்லாதவரின், பிரச்னையில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. குறைந்த அளவில், பணவரவு கிடைக்கும் . தம்பதியர் ஒற்றுமை, குடும்ப நலன் சிறக்க உதவும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்களின் அனுபவ அறிவு பரிமளித்து, கூடுதல் புகழ் பெறுவீர்கள். பிறருக்கு உதவுகிற மனப்பான்மை வளரும். தொழில் வளர்ச்சியில், புதிய சாதனை இலக்கை அடைவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். – கலாபம்

தனுசு:
இன்று, உங்கள் எண்ணத்தில், கலை ரசனை மிகுந்திருக்கும். சமூக நிகழ்வுகளை, புதிய கோணத்தில் கருதுவீர்கள். நிலுவைப்பணிகளை, நினைவுப்படுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வியத்தகு முன்னேற்றம் பெறும். உபரி பணவரவில், குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, தங்களின் நற்செயலை சில பரிகாசம் செய்வர். பொறுமை குணம் பின்பற்றுவதால், தேவையற்ற சிரமம் தவிர்க்கலாம். தொழில் உருவாகிற இடையூறு, தாமதமின்றி சரிசெய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவன நடை நல்லது. – கலாபம்

கும்பம்:
இன்று, உங்கள் மனதில், நம்பிக்கை குறைவு ஏற்படலாம். முந்தைய சாதனைகளை, கவனத்தில் கொள்வதால் நன்மை ஏற்படும். தொழிலில் உள்ள அனுகூலம், பிறரிடம் சொல்ல கூடாது. பணவரவில் தாமதம் இருக்கும். நிர்பந்தத்தின் பேரில், அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். – கலாபம்

மீனம்:
இன்று, நீண்ட நாள் தாமதமான செயலில், புதிய திருப்பம் ஏற்படும். உங்களை விமர்சித்தவர், புகழ்வது போல பாசாங்கு செய்து பேசுவர். தொழிலில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். – கலாபம்

Related Posts:

«