21ம் தேதி முதல் 10 நாட்கள் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவு

டெல்லியில் இன்று காவிரி மேற்பார்வைக் குழு கூடியது. குழுவின் கூட்டத்தில் ஆலோசித்தபடி, வருகிற 21ம் திகதி முதல் 10 நாட்கள் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது.உச்ச நீதிமன்றம் 20ம் திகதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட உத்தரவுப் பிறப்பித்துள்ள நிலையில், மேலும் நீட்டித்து காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவுப் பிறப்பித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

ஏற்கனவே கபிணி அணையிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.தண்ணீர் குறைவு இருப்பதால் கேஆர்எஸ் அணையிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் மட்டுமே நிறுத்தம. ஆனால், திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

இதையடுத்து,செப்.25 வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல். தமிழர் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பெங்களூரு: பெங்களூருவில் 32 மணி நேரம் மதுபான கடைகளை மூட மாநகர காவல் ஆணையர் மெக்ரித் உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«