6 அணிகள் பங்கேற்கும் பேட்மிட்டன் லீக் இன்று தொடக்கம்:சாய்னா, சிந்து களம் இறங்குகிறார்கள்

6அணிகள் பங்கேற்கும் இந்தியன் பேட்மிட்டன் லீக் இன்று டெல்லியில் தொடங்குகிறது. சாய்னா நேவால், சிந்து களம் இறங்குகிறார்கள்.பேட்மின்டன் விளையாட்டு இந்தியாவில் புதிய அவதாரம் எடுக்கிறது.


ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் இந்தியன் பேட்மிட்டன் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதையொட்டி ஏற்கனவே வீரர், வீராங்கனைகள் ஏலம் விடப்பட்டனர்.இந்தியன் பேட்மிட்டன் லீக் போட்டி இன்று தொடங்கி வருகிற 31ம் திகதி வரை 6 நகரங்களில் நடைபெறுகிறது. பெங்களூரு, பங்காபீட்ஸ், ஹைதராபாத் ஹாட்ஷாடஸ், டெல்லி ஸ்மார்ஷஸ், மும்பை மாஸ்டர்ஸ், லக்னோ அவாத்தே வாரியர்ஸ், புனே பிஸ்டன்ஸ், ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி, அரை இறுதிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு ஆண்கள் ஒற்றையர் ஆட்டம், மற்றும் பெண்கள் ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், மற்றும் கலப்பு இரட்டையர் ஆட்டம் என்றும் நடைபெற உள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் இருக்கும் ஆட்டத்தில், டெல்லி, புனே அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத், லக்னோ அணியினர் மோதுகின்றனர்.

Related Posts:

«