60 போலிசாரைப் பலி கொண்ட பாகிஸ்தான் குவெட்டா நகரத் தாக்குதலுக்கு ISIS பொறுப்பு

 

இத்தாக்குதலில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். முகமூடி அணிந்த கிட்டத்தட்ட 3 துப்பாக்கிதாரிகள் போலிசார் பயிற்சி பெற்று வரும் குறித்த அகெடமியில் மெஷின் துப்பாக்கியால் சுட்டும் கிரைனேட்டுக்கள் வீசியும் தாக்குதல் நடத்திய பின்னர் தமது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகின்றது. இந்த துப்பாக்கிதாரிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து உத்தரவு பெற்றதாகவும் தெரிய வருகின்றது. இத்தாக்குதல் நடந்த பின் உடனடியாக சம்பவ இடத்தைப் பார்வையிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் நேரில் சென்றுள்ளார். 5 மணித்தியாலம் நீடித்த இந்த முற்றுகையின் போது சில போலிஸ் பயிற்சியாளர்களை ISIS பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. 190 மில்லியன் முஸ்லிம் சனத்தொகையைக் கொண்டுள்ள பாகிஸ்தான் அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில் தான் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் குவெட்டாவில் உள்ள வைத்திய சாலை ஒன்றின் மீது ISIS தொடுத்த தாக்குதலில் 70 பேர் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சோமாலியாவைச் சேர்ந்த போராளிக் குழுவான அல் ஷபாப் கென்யாவின் மண்டேரா நகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை கிறித்தவர்கள் மீது தொடுத்த தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Related Posts:

«