94 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் கையளித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா!

இன்று பிரதமரை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்த ஜெயலலிதா மொத்தம் 94 பக்கங்கள் அடங்கிய கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார். 


இன்று காலை11 மணி அளவில் சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஜெயலலிதா, பிற்பகல் 4 மணி அளவில் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் அவரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், காவிரி மேலாண்மை வாரியமமைப்பது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளாவிடம் பேசுவது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிக்கக் கூடாது. கச்சத்தீவை மீட்பது, காவல் துறையை நவீனப்படுத்துவது, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க வேண்டும், தமிழை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அந்த அம்னுவில் வைத்துள்ளார் முதல்வர் என்று தெரிய வருகிறது.

Related Posts:

«