Breaking News : மைக்கெல் ஷூமார்க்கர் கோமாவிலிருந்து நினைவு திரும்பினார்!


ஜேர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதுடைய F1 கார் ரேஸிங் மன்னன் மைக்கல் சூமேக்கர் 2013 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரெஞ்சு அல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கின் (Skiing) போது விபத்தில் சிக்கி தீவிர கோமா நிலைக்குச் சென்றிருந்ததுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப் பட்டிருந்தார்.


 

இவர் மார்ச் 7 ஆம் திகதி சற்று ஸ்திரமடைந்து இருந்ததுடன் கடந்த ஜூன் 13 ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நினைவு திரும்பியுள்ளதாகவும் கோமாவிலிருந்தும் மீண்டுள்ளதாகவும் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரெனோபிள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷூமாக்கர் தற்போது சுவிற்சர்லாந்தின் லௌசான் பல்கலைக் கழக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரால் தற்போது பார்க்கவும், கேட்கவும் முடியும் எனவும் அவர் அவரது குடும்பத்தினரை அடையாளம் காண முடிந்தததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஷூமார்க்கரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்த மருத்துவர்களுக்கு ஷூமார்க்கரின் மனைவியார் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார்.

 மைக்கல் சூமேக்கர் 7 தடவை F1 கார் ரேஷிங் உலகக் கிண்ணத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் உடல் நலம் குறித்த இறுதி அறிவிப்புக்கள் ஏப்பிரல் மத்தியிலேயே அறிவிக்கப் பட்டிருந்தது.

Related Posts:

«