Sri Lankan News

October 15, 2016

இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு

இலங்கையின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களத்தின் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியுடன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

October 15, 2016

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் நவம்பர் மாதம் இலங்கைக்கு கிடைக்கும்?

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்தித்து வரிச் சலுகை பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த

October 15, 2016

மலையக மக்களின் உரிமைக்காகக் கை கொடுப்போம்! கிளிநொச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம்

மலையக மக்களின் உரிமைக்காகக் கை கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில், அருட்தந்தை செல்வம் மற்றும் அருட்தந்தை ஜோசுவா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண கல்வி

October 15, 2016

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவளித்து மட்டக்களப்பில் இரண்டாவது கவன ஈர்ப்பு போராட்டம்

மலையக தோட்டத்தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் சம்பள உயர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று நடைப்பெற்றுள்ளது. குறித்த கவன ஈர்ப்பு போராட்டமானது, மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலையத்தில் 1000ரூபா

October 15, 2016

இலங்கையின் சிறந்த நடிகராக மாறினாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து மக்களை ஏமாற்றும் நடிப்பு மாத்திரமே எனவும் அது நடிப்பு இல்லை என்றால், அவர் அதனை செயலில் ஒப்புவித்து காட்ட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இப்படியான நடிப்புகள் மூலம் மக்களை தொடர்ந்தும்

October 15, 2016

மைத்திரி – ரணில் திருமணம்..! விவாகரத்துக்கு இடமில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் அரசியல் ரீதியான திருமணமானது பலமான ஒன்று என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இருவரையும் விவாகரத்துக்கு அழைத்து செல்ல கூட்டு எதிர்க் கட்சி முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அது ஒரு

October 15, 2016

பிரபாகரன் தமிழ் அடையாளத்தை வைத்தே போராடினார் – திருமாவளவன்

பாரதீய ஜனதா கட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இலங்கையில் சிவசேனை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள்

October 15, 2016

மைத்திரி ரணில் திடீர் சந்திப்பு – ரணிலின் நிலைப்பாட்டில் மாற்றமா..?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிலேயே பிரதமரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹஷிம் இதனை தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று இடம்பெற்ற மக்கள்

October 15, 2016

முப்பது வருடங்களுக்கு மேலாகப் புனரமைக்கப்படாத யாழ். ஊரெழு மேற்குச் சங்க வீதி

வலி.கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ். ஊரெழு மேற்குச் சங்க வீதி கடந்த 30 வருடங்களுக்கு மேல் புனரமைப்புச் செய்யப்படாத காரணத்தால் மிகவும் மோசமாகச் சேதமடைந்து குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக இவ் வீதியால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத்

October 15, 2016

யாழ். மருத்துவர் சமூகமே நெடுந்தீவு மாணவி மரணத்துக்கு பொறுப்புக் கூறவேண்டும்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி டிலாஜினி ரவீந்திரன் கடந்த புதன்கிழமை அன்று கடும் நோயில் வீழ்ந்து நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். டிலாஜினியின் மரணம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள அனைத்து ஊடகங்களும் குறித்த மாணவியின் மரணத்துக்கான மூல வேரைக் கண்டறியாமல்