Tag Archives: அரசியல்

February 16, 2016

அரசியல் கைதிகள் மீதான வழக்கை மீளப்பெற சட்டமா அதிபருடன் பேச்சு!

இந்தத் தகவலைத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாமல் எவருமே இல்லை என்று நான் தெரிவித்தாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

February 16, 2016

தேங்காய் உடைப்பு அரசியல் உணர்த்தும் சந்தேகம்

பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்கின்ற FCID பிரிவின் நடவடிக்கைகளை துரும்பாக வைத்துக் கொண்டு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியென தங்களைக் கூறிக் கொள்கின்ற அணியினர் பெரும் அரசியல் வியாபாரமே நடத்திக் கொண்டிருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இயங்குகின்ற அந்த அணியினரைப் பொறுத்தவரை

February 14, 2016

காணாமற்போனோர்- அரசியல் கைதிகள் தொடர்பில் பிரேரணை; இரா.சம்பந்தன் முன்வைக்கவுள்ளார்!

காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கவுள்ளார்.  பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர்

February 12, 2016

அரசியல் தொடர்பாடல்களுக்கான புதிய அலுவலகத்தை மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்தார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தொடர்பாடல்களுக்கான புதிய அலுவலகமொன்றை கொழும்பு பத்தரமுல்லையில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளார்.  இந்நிகழ்வில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின்

February 11, 2016

உத்தேச (புதிய) அரசியல் யாப்பும் தமிழ் மக்களும்

பொதுமக்களிடமிருந்து எழுத்துமூலமான மற்றும் வாய்மூலப் பிரேரணைகளைப் பெறுவதற்காக அதற்கென்று நியமிக்கப்பெற்ற அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழு தனது பணியை 18.01.2016 அன்று கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது. இக்குழு ஏனைய மாவட்டங்களுக்குச் செல்லும் திகதிகளும் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தேச

February 7, 2016

அரசியல் கைதிகளுக்கு ‘பொது மன்னிப்பு’ தவறு என்றார் ஹூசைன்; வழக்கை துரிதப்படுத்தக் கோரினேன்: சி.வி.விக்னேஸ்வரன்

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது தவறு. அவர்களை வழக்கு விசாரணைகளின் பின்னரே விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், ஐக்கிய நாடுகளின்

February 7, 2016

அரசியல் பாடநெறியை கற்க அமெரிக்க சென்றார் அமைச்சர் கபீர் ஹசீம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அமைச்சரை இந்த பாடநெறிக்காக அனுப்பியுள்ளதாக பிரதமரின் அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர் ஹசீம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அரச நிறுவனங்கள் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான இந்த பாடநெறி 10 நாட்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் பல நாடுகளின்

February 6, 2016

கிழக்கு முதலமைச்சர் பிரதேசவாதம் பேசுவது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது!- இராதாகிருஸ்ணன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் இசட்.ஏ. நசீர் அஹமட் கல்வி இராஜாங்க அமைச்சர் மலையகத்தில் இருந்து வந்து மாகாண அதிகாரங்களுக்கு சவால் விடுக்கின்றார் என்ற தலைப்பில் தெரிவித்துள்ள கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். “கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கும்

February 6, 2016

அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று சுஷ்மாவிடம் வலியுறுத்தினோம்: எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமானது. அதனைப் பெறுவதற்கான முயற்சிகளில் இந்தியா உதவ வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான

February 5, 2016

வடக்கு- கிழக்கில் காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கறுப்புக்கொடி போராட்டம்!

கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமற்போனோரை கண்டறியுமாறும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலும் கறுப்புக் கொடி அணிந்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இலங்கையின் 68வது சுதந்திர தினமான