Tag Archives: இந்திய

October 25, 2015

புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் விற்பனை: பாதிக்கப்பட்ட பல மக்கள் வீடு கோரி கண்ணீர்

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் புளியங்குளம் வடக்கில் வழங்கப்பட்ட வீடுகள் பல பொருத்தமற்றவர்களுக்கும், வீடுகள் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையால் சில வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிராம அலுவலரின் உறவினரான வீடு உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வீடு ஒன்று எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

October 25, 2015

பாலியல் இச்சைக்காக இந்திய வீடு தொடர்பிலான விசாரணை பொலிஸாரிடம் கையளிப்பு

ஏற்கனவே இந்த முறைப்பாடு தொடர்பில் செஞ்சிலுவை சங்கமும் இந்திய உயர்ஸ்தானிகரகமும் விசாரணைகளை நடத்தின. எனினும் உரிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையிலேயே விசாரணையின் அறிக்கை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுப்பதா? என்பது தொடர்பில் பொலிஸ்மா அதிபரே முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

October 23, 2015

இந்திய மீனவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த 19மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினால் 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இவர்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பருத்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த

October 21, 2015

இந்திய இராணுவம் யாழ் வைத்தியசாலைக்குள் படுகொலை செய்த 68 பேரின் 28வது நினைவு தினம் இன்று!

இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் அமைதி காக்கும் பணிக்காக வருகை தந்த இந்திய இராணுவம் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வைத்து நோயாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரினை படுகொலை செய்து இன்றோடு 28வது ஆண்டுகள் நிறைகின்றது.  அதன், அஞ்சலி நிகழ்வுகள்

October 20, 2015

இராமநாதபுரத்தில் கைவிடப்பட்ட படகில் ஐந்து பேர் பயணித்திருக்கலாம்? இந்திய அதிகாரிகள்

அதிவேக கண்ணாடி இழை படகு ஒன்றே கடந்த வாரம் மீட்கப்பட்டது. இந்தப் படகில் ஐந்து பேர் பயணித்திருக்கலாம் என்று தாம் நம்புவதாக கரையோர பாதுகாப்பு மேலதிக பணிப்பாளர் நாயகம் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இந்தப் படகு கடந்த 13ஆம் திகதியன்று மீட்கப்பட்டது.

October 18, 2015

பாலியலுக்காக இந்திய வீடு! விசாரணை பூர்த்தி! நாளை முடிவு எடுக்கப்படும்!- இலங்கை செஞ்சிலுவை சங்கம்

இந்த விசாரணைகள் செஞ்சிலுவை சங்கத்தின் சில அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் நாளை விசாரணை அறிக்கை தொடர்பில் உயர்மட்ட சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. இதன்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளைää விசாரணைக்கு உட்பட்டு வரும்

October 17, 2015

இந்திய – தென் ஆபிரிக்க ஒரு நாள் போட்டியின் போது கவனயீர்ப்பு போராட்டம் நடத்த ஹர்திக் படேல் திட்டம்!

இந்திய – தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நாளை ஞாயிற்றுக் கிழமை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது ஒரு நாள் போட்டியை வழி மறிக்கப் போவதாக ஹர்திக் படேல் குழுவினர் மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத்தில் படேல்

October 13, 2015

புனேயில் நடந்த இந்திய- இலங்கை படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவுக்கு வந்தது!

மித்ரசக்தி -2015 என்ற பெயரில் இடம்பெற்ற இந்த 14 நாள் கூட்டுப் பயிற்சியின் நிறைவு விழா, புனேயில் உள்ள ஆன்ட் இராணுவத் தளத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த பயிற்சி நிறைவு விழாவில் நடந்த அணிவகுப்புக்கு, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஆசிஸ் குமார்

October 10, 2015

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு; கூட்டுக் கண்காணிப்பு அவசியம்: இரா.சம்பந்தன்

இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கு பகுதி கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடிப்பதால், வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இந்திய மீனவர்கள் ‘பொட்டம் ரோலிங்’ எனும் ஆழ்கடலில் பாரிய

October 5, 2015

விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலாண் கேட்டில் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எல்.மேகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்