Tag Archives: ஐ.நா

March 19, 2014

மாயமான மலேசிய விமானம் வெடித்த அல்லது விபத்துக்குள்ளான தடயம் இல்லை என ஐ.நா அறிவிப்பு

மார்ச் 8 சனிக்கிழமை மாயமாக மறைந்து போன மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் காணாமற் போய் 10 நாட்களுக்கும் அதிகமாகியுள்ள வேளையில் இந்த விமானம் எவ்விடத்திலும் வெடித்துச் சிதறியதற்கோ அல்லது விபத்துக்குள்ளானதற்கோ ஆன தடயம் தமக்குக் கிடைக்கவில்லை என ஐ.நா பொதுச் செயலாளர்

March 17, 2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையில் இலங்கை மீது விசாரணை: அமெரிக்காவின் திருத்திய தீர்மானம்!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படா விட்டால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலேயே சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் திருத்திய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவில்

March 16, 2014

சிரிய மக்களைக் காப்பாற்ற மேற்குலகு தனது எல்லைகளைத் திறக்க முன்வருமாறு ஐ.நா கோரிக்கை

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் மிக அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ள 5.5 மில்லியன் சிறுவர்களையும் ஏனைய மக்களையும் காப்பாற்ற மேற்குலகம் தமது எல்லைகளில் விதிகளைத் தளர்த்தி அவற்றைத் திறக்க வேண்டும் என ஐ.நா சபையும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

March 15, 2014

ஐ.நா முதல் வரைவு தீர்மானமும் நல்லவை, கெட்டவை, மோசமானவை! ச.வி. கிருபாகரன்

தமிழ் ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், இது அறவே ஒழிந்து விட்டதாக இவ்வேளையில் எவரும் கூறமுடியாது. இவ்விடயத்தில் இன்றுவரை பல கேள்விகளுக்கும் விடை காணாது உள்ளோம்.  ஆனால், ஆபிரிக்க– நைஜீரிய நாட்டின் தென்கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ‘வாபெறா’ மக்களது போராட்டம்நல்ல வெற்றியடைந்தது மட்டுமல்லாது, இப்பிரதேசத்தின்

March 13, 2014

ஐ.நா இன் பொருளாதாரத் தடைகளை தவிர்க்கும் முயற்சியில் முன்னேறும் வடகொரியா

சமீபத்தில் வடகொரியா பற்றி ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், வடகொரியா தன் மீது சுமத்தப் பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதில் வேறு விதமான பல யுத்திகளைக் கையாளுவதாகவும் ஆனால் முக்கியமான தனது அணுசக்தி செறிவூட்டல் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பதை

March 3, 2014

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை அழுத்தத்தில்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரின் இன்று திங்கட்கிழமை (ஜெனீவா நேரப்படி) காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்

February 27, 2014

நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம்: லண்டனில் இருந்து ஐ.நா நோக்கி புறப்படுகிறது!

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு, பல நடை பயணங்கள் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்று வரும் நிலையில், இந்த நடை பயணமானது நீதிக்கும் சமாதானத்துக்குமென்ற முழக்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் எதிர்வரும் 3ம் திகதி 10 Downing

February 25, 2014

நீதியை நிலைநாட்ட 27வது நாளாக தொடர்கிறது ஐ.நா. நோக்கிய நடை பயணம்

நேற்றைய தினம் நோர்வே நாட்டினுடைய பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் சிற்றூர்ந்து பரப்புரை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். எதிர்வரும் 26.02.2014 அன்று தமிழர்களுடைய தேசிய விடுதலை இயக்கமாகத் திகழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி Luxembourgகில் அமைந்துள்ள ஐரோப்பாவினுடைய உச்ச

February 23, 2014

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது:த.தே.கூ

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

February 18, 2014

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் மஹிந்த சமரசிங்கவும் பங்கெடுக்கிறார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மனித உரிமைகள் தொடர்பிலான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவும் கலந்து கொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.