Tag Archives: தமிழக

October 8, 2016

முதல் முறையாக வெளியானது தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோக்குள்ளான புகைப்படங்கள்.!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குள் பல்வேறு தலைவர்களும் சென்று பார்த்து வருகின்றனர். எனினும், அவர்கள் உள்ளே யாரைச் சந்தித்தனர் என்பது குறித்து ஒரு புகைப்படம் கூட வந்ததில்லை. இந்நிலையில், முதல் முறையாக ராகுல் காந்தி வந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

September 29, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை: ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களும் போனஸ் பெறுவர் என்று அறிவித்துள்ளார்.   சம்பள உச்சவரம்பு தளர்த்தப்படும்.ஊழியர்கள்

September 26, 2016

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எந்திரத்தை பயன்படுத்த திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரிக்கை வைத்து  உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்றும் வாக்கு இயந்திரத்தை  பயன்படுத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது. திமுக செய்தி தொடர்பாளர் சுந்தரத்தின் மனு

September 25, 2016

தமிழக – கேரளா எல்லையில் ஒற்றை புலியால் பீதி.. கூண்டு வைத்து கண்காணிக்கும் வனத்துறை

செங்கோட்டை: தமிழக-கேரள எல்லை பகுதியிலுள்ள புளியரை வனப்பகுதியில் மாடு, ஆடுகளை வேட்டையாடி வரும் ஒற்றைப் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான தமிழக பகுதியைச் சேர்ந்த புளியரையிலும், கேரள பகுதியைச்

September 20, 2016

தமிழக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 8 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மாநில பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி , சரோஜா , கருப்பண்ணன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர்

September 18, 2016

உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன்: தி மு.க. முப்பெரும் விழாவில் கருணாநிதி!

நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி ஆற்றி வருகிறேன். ஆற்ற வேண்டிய தொண்டை ஆற்றுவேன். தொடர்ந்து இயக்கத்தை கட்டிக் காப்பேன். பல இழப்புகளையும் தாண்டி இந்த இயக்கத்தை தொண்டர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் நாம் குரல் எழுப்பியிருக்கிறோம். தொடர்ந்து கட்சியை வளர்க்க

September 17, 2016

கர்நாடகாவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக லாரி டிரைவர்.. காப்பாற்ற மனைவி மனு

பெங்களூர்: காவிரி பங்கீடு தொடர்பான கலவரம் உச்சத்தில் இருந்தபோது, கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த நைஸ் சாலையில், தமிழக லாரி டிரைவர் ஒருவர் லுங்கியை அவிழ்த்து, ஜட்டியோடு நிற்க வைத்து கன்னட அமைப்பினர் தாக்கிய வீடியோ வெளியாகி தமிழகத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. அந்த டிரைவர்

September 11, 2016

காவிரி பிரச்சனை: பெங்களூருவில் தமிழக இளைஞர் மீது கடும் தாக்குதல்!

நேற்று, கன்னட  நடிகர்- நடிகைகள், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். இது குறித்து தமது முகநூலில் சம்பத் என்கிற தமிழக இளைஞர் கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதாவது, கன்னட நடிகர்-நடிகைகள் தமிழகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், தமிழகத்தில் உள்ள நடிகர்-நடிகைகள் அப்படி

September 10, 2016

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு:ஜெயலலிதா

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1. 98 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரை அடுத்து அமெரிக்க வீரர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், 1. 86 மீட்டர் உயரம் தாண்டி உத்திர பிரதேச வீரர் வருண்

September 8, 2016

கர்நாடகாவில் நாளை பந்த்: பாதுகாப்புக் கருதி நாளை தமிழக லாரிகள் இயங்காது

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடக விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் இதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம்