Tag Archives: தமிழ்

September 26, 2016

எழுக தமிழ் கோரிக்கைகளும் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் ஒன்றே: சீ.வி.கே.சிவஞானம்

எழுக தமிழ் பேரணியில் தமிழரசுக் கட்சி பங்குபற்றாமை தொடர்பில் எதிர்ப்பு வெளியிட வேண்டிய தேவை ஏதும் இல்லை. பேரணியொன்றில் பங்குபற்றுவதும், பங்கு பற்றாமல் இருப்பதும் தனிப்பட்ட விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து

September 25, 2016

எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு எதிரானவை: எம்.ஏ.சுமந்திரன்

எழுக தமிழ் பேரணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

September 25, 2016

எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு அழுத்தங்களைத் தர வேண்டும்: மனோ கணேசன்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எழுக தமிழ் போராட்டமும், எழுக இலங்கை போராட்டமும் ஒன்றை ஒன்று புரிந்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையில் முரண்பாடு எழ தேவையில்லை.  எழுக இலங்கை அல்லது எழுக இலங்கையர் என்று அழைக்கும் போது அது, எழுக தமிழ், எழுக சிங்களம், எழுக முஸ்லிம்

September 24, 2016

எழுக தமிழ் வெற்றி சொல்லும் செய்திகள்!

ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய ஜனநாயக இடைவெளியை தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆரோக்கியமான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களின் போக்கிலும், அதீத உணர்ச்சியூட்டல்கள் இல்லாமல் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியப் பரப்பினால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை மீளவும் உறுதி செய்யக் கோரும்

September 24, 2016

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துக் கூறவே நாம் அணி திரண்டோம்: ‘எழுக தமிழ்’ பேரணி உரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

எழுக தமிழ் பேரணி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் ஆரம்பித்து, யாழ் நகர வீதிகளினூடு முற்றவெளியை அடைந்தது. அங்கு பிரதான கூட்டம் நடைபெற்றது. அங்கு, எழுக தமிழ் பிரகடணத்தை தமிழ்

September 24, 2016

எழுக தமிழ் பேரணி இன்று!

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றலிலிருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் ஆரம்பமாகும் பேரணிகள், யாழ்ப்பாணம் முற்றவெளியில் சங்கமித்து பிரதான கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடு இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. 

September 24, 2016

எழுக தமிழ் பேரணிக்குத் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள்

யாழ். குடாநாட்டில் நாளை நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்களிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்மராட்சிப் பிரதேசத்தில் நாவற்குழி, கைதடி, நுணாவில், கனகம்புளியடி, சாவகச்சேரி,

September 23, 2016

தமிழ் மக்களின் போராட்டங்கள் மக்கள் மயப்பட வேண்டும்; ‘எழுக தமிழ்’ பேரணிக்கான அழைப்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்!

“எமக்கான தீர்வை நாங்களே தான் பெற்றுக்கொள்ள முடியும், வேண்டும். அதை வேறு யாரும் பெற்றுத்தர முடியாது. தெளிவான அரசியல் நோக்கோடு எதிர் நோக்குப் பார்வையும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அணுகு முறையும் வரலாற்றுக் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.” என்றும் அந்த அமையம் குறிப்பிட்டுள்ளது.

September 23, 2016

"எழுக தமிழ்" தமிழ் பேரணியை தடுத்தால் ஆபத்து – கூட்டமைப்பு எச்சரிக்கை

எழுக தமிழ்’ மக்கள் பேரணியை தடுத்தால் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த

September 23, 2016

எழுக தமிழ் பேரணிக்கு அலைகடலாய் அணிதிரள்வீர்! தொல். திருமாவளவன்

2009மே மாதம் மௌனிக்கப்பட்டது ஆயுதங்களை தான், எங்கள் ஜனநாயக போராட்டத்தை அல்ல என்பது உலகச் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு தான் ‘எழுக தமிழ்’ போராட்டம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்